அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்த கடைக்கு 'சீல்'
பனப்பாக்கத்தில் அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்த கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
நெமிலி,
ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் பகுதியில் உள்ள கடைகளில் அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்யப்படுவதாக நெமிலி தாசில்தார் பாலசந்தருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் இன்று ஓச்சேரி செல்லும் சாலையில் அமைந்துள்ள கடை ஒன்றில் சோதனை நடத்தினார்.
அப்போது அரசு அனுமதியின்றி பட்டாசு விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
அப்போது நெமிலி இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி, வருவாய் ஆய்வாளர் தனலட்சுமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.