சிறப்பு தள்ளுபடி என்ற பெயரில் காலாவதியான பொருட்களை விற்ற கடைக்கு 'சீல்'

சிறப்பு தள்ளுபடி என்ற பெயரில் காலாவதியான பொருட்களை விற்ற கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.;

Update: 2022-12-24 18:40 GMT

வாணியம்பாடி

சிறப்பு தள்ளுபடி என்ற பெயரில் காலாவதியான பொருட்களை விற்ற கடைக்கு 'சீல்' வைக்கப்பட்டது.

வாணியம்பாடி மண்டி தெருவில் ஒரு கடையில் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்தன. இதனையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரி பழனிசாமி அந்த கடையில் நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது பண்டிகை காலம் என்பதால் கவர்ச்சிகரமாக 40 சதவீதம் மலிவு விலைக்கு விற்பனை செய்வதாக பேனர் வைத்து காலாவதியான பொருட்கள் மற்றும் போலியான நிறுவன தயாரிப்பு பொருட்களை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து உணவு பாதுகாப்பு அதிகாரி மற்றும் வாணியம்பாடி நகராட்சி அதிகாரிகள் அங்கிருந்த பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த கடைக்கு அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்