புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு 'சீல்'

புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு ‘சீல்' வைக்கப்பட்டது.

Update: 2022-11-09 18:45 GMT

நாகை மாவட்டம் திருமருகல் பகுதிகளில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் திட்டச்சேரி சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் சுரேஷ், உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ஆண்டனி பிரபு, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் டென்னிசன், வீரப்பிள்ளை, சிவக்குமார் ஆகியோர் திருமருகல் பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது பன்னீர்செல்வம் (வயது 65) என்பவரின் கடையில் புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்தது. இதையடுத்து உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் கடைக்கு 'சீல்' வைத்தனர். மேலும் கடைகளில் வைத்திருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்