நெல்லை சந்திப்பு ரெயில் நிலைய சாலையில் நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரத்தை சின்னப்பன் (வயது 65), இவருடைய மனைவி சங்கரம்மாள் ஆகியோர் துணி தேய்க்கும் (அயனிங் கடை) நடத்தி வருகின்றனர். இங்கு ஏராளமான வேட்டி- சட்டைகள், சேலைகள் தேய்ப்பதற்கு வாங்கி வைத்திருந்தனர். இந்தநிலையில் நேற்று இரவில் திடீரென கடையில் தீப்பிடித்து எரிந்தது. அப்போது காற்று பலமாக வீசியதால் தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதில் கடையில் இருந்த ஏராளமான வேட்டி, சட்டைகள் எரிந்து நாசமானது.
இது பற்றி தகவல் அறிந்த பாளையங்கோட்டை தீயணைப்பு வீரர்கள், நிலைய அலுவலர் முருகன் தலைமையில் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். நெல்லை சந்திப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜனகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து எப்படி தீப்பிடித்தது? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.