விக்கிரவாண்டியில் இன்று நடக்க இருந்தகடையடைப்பு போராட்டம் வாபஸ்
விக்கிரவாண்டியில் இன்று நடக்க இருந்த கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டி கடை வீதியில் சாலை விரிவாக்கம், மழைநீர் வடிகால் பணியை விரைந்து முடிக்க கோரி வர்த்தக சங்கம் சார்பில் 3-ந்தேதி (அதாவது இன்று) கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவித்து இருந்தனர்.
இந்த நிலையில், நேற்று விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் வர்த்தக சங்க நிர்வாகிகளுடனான சமாதான கூட்டம் நடைபெற்றது. இதற்கு தாசில்தார் ஆதிசக்தி சிவக்குமரி மன்னன் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் அப்துல்சலாம், சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ், நெடுஞ்சாலை உதவி பொறியாளர் அனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் தெய்வீகன் வரவேற்றார். கூட்டத்தில், வருகிற 20-ந்தேதிக்குள் சாலை விரிவாக்கம் மற்றும் மழைநீர் வடிகால் பணியை முடிக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதியளித்தனர். இதையேற்று, இன்று நடைபெற இரந்த கடையடைப்புட போராட்டத்தை வாபஸ் பெறுவதாக வர்த்தகர்கள் தரப்பில் அறிவித்தனர்.
இதில், மின்வாரிய இளமின் பொறியாளர் வெங்கடேசன், நெடுஞ்சாலை துறை சாந்தி, முதுநிலை வருவாய் ஆய்வாளர் ஷர்மிளாதேவி, கிராம நிர்வாக அலுவலர்கள் ஜெயபிரகாஷ், ஸ்ரீதர், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் விஸ்வநாதன், மேற்பார்வையாளர் ராமலிங்கம், ஒப்பந்ததாரர் மேலாளர் பாலா, சக்தி ராஜன், வர்த்தகர் சங்க தலைவர் ராஜபாண்டியன், அமைப்பாளர் தனசேகரன், கவுரவ தலைவர் சம்பத், செயலாளர் ஜியாவுதீன், பொருளாளர் சாதிக் பாஷா, தொகுதி செயலாளர் ராஜாராம், துணைத் தலைவர்கள் மணிவண்ணன், அஷ்ரப் உசேன், சிவா, சர்புதீன், பாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.