தர்மபுரியில்சொத்து வரி செலுத்தாத 6 கடைகளுக்கு `சீல்'

Update: 2023-01-05 18:45 GMT

தர்மபுரி நகராட்சி பகுதியில் சொத்து வரி, கடை வாடகை, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட வரி இனங்களை வசூலிக்கும் பணியில் நகராட்சி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று நகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார் தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் முத்துக்குமார், மாதையன், அலுவலக மேலாளர் விஜயா மற்றும் நகராட்சி அலுவலர்கள் சொத்து வரி, கடை வாடகை வசூலிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவிலுக்கு சொந்தமான வணிக வளாகத்தில் உள்ள ஒரு சில கடைகளுக்கு சொத்துவரி கட்டப்படாமல் நிலுவையில் இருந்தது. அவ்வாறு சொத்து வரி நிலுவையில் இருந்த 6 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். இதேபோன்று தர்மபுரி நகரில் உள்ள சொத்து வரி செலுத்த தவறினால் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்