நகைக்கு ஆசைப்பட்டு சக ஊழியரை கொலை செய்த பெண் - நாமக்கல் அருகே அதிர்ச்சி

கௌரி காஞ்சனா கடன் சுமையால் தவித்து வந்த நிலையில், சக ஊழியரான மாதேஸ்வரி அணிந்திருந்த நகைகளை திருட முயற்சி செய்துள்ளார்.

Update: 2023-12-31 16:31 GMT

நாமக்கல்,

நாமக்கல் அருகே நகைக்கு ஆசைப்பட்டு சக பெண் பணியாளரை கழுத்தை நெறித்துக் கொலை செய்து கால்வாயில் வீசிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். குமாரபாளையத்தில் உள்ள நகராட்சி துவக்கப்பள்ளியில் சத்துணவு சமையல் பணியாளர்களாக கௌரி காஞ்சனா மற்றும் மாதேஸ்வரி ஆகியோர் பணிபுரிந்து வந்தனர்.

கௌரி காஞ்சனா கடன் சுமையால் தவித்து வந்த நிலையில், சக ஊழியரான மாதேஸ்வரி அணிந்திருந்த நகைகளை திருட முயற்சி செய்துள்ளார். அப்போது அவரின் கழுத்தை நெரித்து கொலை செய்த கௌரி காஞ்சனா, அவர் அணிந்திருந்த நகைகளை எடுத்துவிட்டு உடலை சாமர்த்தியமாக அங்கிருந்து எடுத்துச் சென்று கால்வாயில் வீசியுள்ளார்.

தாயைக் காணவில்லை என மாதேஸ்வரியின் மகள் அளித்த புகாரின் அடிப்படையில் உடன் பணிபுரிந்த கௌரி காஞ்சனாவிடம் விசாரணை நடத்த போலீசார் முயன்ற போது, அவர் தலைமறைவானது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் தேடுவதை அறிந்த கௌரி காஞ்சனா விஏஓ மூலம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

பின்னர் விசாரணையில், மாதேஸ்வரியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Full View

Tags:    

மேலும் செய்திகள்