சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

ஓசூரில் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.;

Update: 2022-11-21 18:45 GMT

ஓசூர்:

ஓசூர் சந்திர சூடேஸ்வரர் மலைக்கோவில், நெசவுத்தெருவில் உள்ள சோமேஸ்வர சாமி கோவில், காமராஜ் காலனியில் உள்ள காசி ஈஸ்வரர் கோவில், ராம் நகரில் உள்ள சோமேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் நேற்று பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நந்தி, சாமிக்கு பால், தயிர், நெய், வெண்ணெய் பஞ்சாமிர்தம், திருநீறு, மஞ்சள், குங்குமம் பன்னீர், இளநீர் உள்ளிட்டவைகளால் அபிஷேகம், வழிபாடு நடந்தன. தொடர்ந்து, சிறப்பு அலங்காரம் செய்து, மகாதீபாராதனை செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்