சிவசேனா கட்சியினர் தபால் அனுப்பும் போராட்டம்
கோர்ட்டுகளில் அம்பேத்கர் படம் வைக்கக்கோரி சிவசேனா கட்சியினர் தேனியில் தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் அம்பேத்கர் உருவப்படம் வைக்கக்கோரி சிவசேனா கட்சி சார்பில் தபால் அனுப்பும் போராட்டம் தேனி தபால் நிலையத்தில் நேற்று நடந்தது. மாநில செயலாளர் குருஅய்யப்பன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு, பிரதமர், ஜனாதிபதி, தமிழக முதல்-அமைச்சர், கவர்னர், மத்திய சட்டத்துறை அமைச்சர், மாநில சட்டத்துறை அமைச்சர் ஆகியோருக்கு கோரிக்கை மனுவை பதிவு தபாலில் அனுப்பினர்.