சிவசேனா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பழனியில் சிவசேனா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
பழனி பகுதி சிவசேனா கட்சி சார்பில், பழனி மயில் ரவுண்டானாவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் கனிவளவன் தலைமை தாங்கினார். மாநில அமைப்பாளர் பாலாஜி, மாவட்ட பொதுச்செயலாளர் முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் குரு அய்யப்பன் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தின்போது, கோவில்களில் போதிய வசதிகள் செய்யாததை கண்டித்தும், கோவில்களை விட்டு இந்து சமய அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என கோரி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் சிவசேனா கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.