உலக பொருளாதாரத்தில் கப்பல் போக்குவரத்து முக்கிய பங்கு வகிக்கிறத

உலக பொருளாதாரத்தில் கப்பல் போக்குவரத்து முக்கிய பங்கு வகிக்கிறது. மிக அதிக எடை கொண்ட சரக்குகளை கப்பல் போக்குவரத்து மூலம் தான் மற்ற நாடுகளுக்கு கொண்டு செல்ல முடிகிறது.

Update: 2023-01-18 18:45 GMT

உலக பொருளாதாரத்தில் கப்பல் போக்குவரத்து முக்கிய பங்கு வகிக்கிறது. மிக அதிக எடை கொண்ட சரக்குகளை கப்பல் போக்குவரத்து மூலம் தான் மற்ற நாடுகளுக்கு கொண்டு செல்ல முடிகிறது. மேலும் அதிக எண்ணிக்கையிலான பயணிகளும் ஒரே நேரத்தில் கப்பலில் பயணம் மேற்கொள்ளலாம். பயணிகள் கப்பல் போக்குவரத்து என்பது உள்நாட்டில் மிகவும் குறைவாகவே உள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னையில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்தின் கடைசி எல்லைப் பகுதி. வேலைவாய்ப்பு, வணிகம், சுற்றுலா என அனைத்திற்கும் தமிழகத்தில் உள்ள மக்கள் சென்னைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. அப்படி சென்னைக்கு சாலை மூலம் சென்று திரும்புவதில் பெரும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

மாநிலத்தில் குறைந்த அளவே உள்ள விமான போக்குவரத்தும் சாதாரண மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இந்த குறையை போக்க சென்னையில் இருந்து கடலூர், பூம்புகார், தரங்கம்பாடி, காரைக்கால், நாகப்பட்டினம் வழியாக தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி, குளச்சல் பகுதிகளுக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கினால் அனைவருக்கும் வசதியாக இருக்கும். இதனால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் குறையும். மேலும் பொருளாதார வளர்ச்சியும் அடைய வாய்ப்பு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்