1,250 டன் புழுங்கல் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பி வைப்பு

1,250 டன் புழுங்கல் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது

Update: 2022-09-06 20:53 GMT

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கி வரும் தஞ்சை மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அரவைக்காக அனுப்பப்பட்டு பொதுவினியோகத்திட்டத்தின் கீழ் அரிசி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நெல் மூட்டைகள் லாரிகள் மற்றும் சரக்கு ரெயில் மூலம் திருவள்ளூர், கோயம்புத்தூர், புதுக்கோட்டை, நெல்லை, சேலம், திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டு வருகின்றன. இது தவிர தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும். அதன்படி நேற்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரிசி ஆலைகள் மற்றும் புனல்குளம், பிள்ளையார்பட்டி உள்ளிட்ட சேமிப்பு கிடங்குகளில் இருந்து 1,250 டன் புழுங்கல் அரிசி 120 லாரிகளில் தஞ்சை ரெயில் நிலையத்துக்கு எடுத்து வரப்பட்டன. பின்னர் சரக்கு ரெயிலின் 21 வேகன்களில் விழுப்புரத்துக்கு அரிசி மூட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்