சக்தி கேந்திர பொறுப்பாளர்களுக்கு கேடயம்; மத்திய மந்திரி வழங்கினார்

தூத்துக்குடியில் பா.ஜனதா கட்சியின் சக்தி கேந்திர பொறுப்பாளர்களுக்கு கேடயத்தை மத்திய மந்திரி வழங்கினார்.

Update: 2023-05-07 18:45 GMT

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜனதா கட்சி அலுவலகத்தில் சிறப்பாக செயல்பட்ட சக்தி கேந்திர பொறுப்பாளர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமை தாங்கினார்.

விழாவில் துறைமுகங்கள் கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் போக்குவரத்து துறை மத்திய இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சக்தி கேந்திர பொறுப்பாளர்களுக்கு கேடயங்கள் வழங்கி பேசினார்.

அவர் பேசுகையில், "தூத்துக்குடி துறைமுகத்தின் செயல்பாடு மிகவும் சிறப்பாக உள்ளது. அதுமட்டும் அல்ல இங்கு பா.ஜனதா கட்சியின் செயல்பாடும் சிறப்பாக உள்ளது. பாரதிய ஜனதா கட்சி இங்கு நன்கு வளர்ந்துள்ளது. நிகழ்ச்சிக்கு வந்துள்ள சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் அனைவரும் இன்னும் சிறப்பாக செயல்பட்டு தமிழகத்திலும் பா.ஜனதா கட்சி ஆட்சி அமைய வேண்டும்" என்றார்.

விழாவில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பார்வையாளரும், மாநில துணைத்தலைவருமான சசிகலா புஷ்பா, மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சந்தனகுமார், மாநில ஓ.பி.சி. அணி துணை தலைவர் விவேகம் ரமேஷ், பொதுச் செயலாளர் சத்தியசீலன், பொருளாளர் சண்முகசுந்தரம், துணை தலைவர்கள் வாரியார், சுவைத்தர், சிவராமன், மாநில பொதுக்குழு உறுப்பினர் இசக்கிமுத்து மற்றும் மண்டல தலைவர்கள், மாவட்ட சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்