கருப்பூர்
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் துரைசாமி. இவருடைய மகள் சுபாஷினி (வயது 27). இவரும், ஓமலூர் அருகே உள்ள பூசாரிப்பட்டியை சேர்ந்த கோபிநாத் (24) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் காதல் ஜோடி கஞ்சநாயக்கன்பட்டி பெருமாள் கோவிலில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதுகுறித்து இரு வீட்டு பெற்றோர்களையும் வரவழைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியை சேர்ந்த முருகன் என்பவரின் மகள் பிரீத்தியும் (19), ஜலகண்டாபுரம் ஆவடத்தூர் பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் நாகச்சந்திரனும் (29) கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த காதல் ஜோடி, அம்மாபேட்டை, குமரகிரி பெருமாள் கோவிலில் திருமணம் செய்து கொண்டு ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தது. அதைத்தொடர்ந்து இரு வீட்டு பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.