அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட சேகர் அதிமுகவில் இணைந்தார்..!
அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட சேகர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
சென்னை,
தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் சேகரை அமமுகவில் இருந்து நீக்கி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நடவடிக்கை எடுத்துள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறி அவப்பெயர் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்டதால் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பேரூராட்சி தலைவர் மா.சேகரை கட்சியில் நீக்கப்படுவதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். இந்த நிலையில், அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட சேகர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். சேகர் அவர்களுடன் ஒரத்தநாடு அமமுக ஒன்றிய செயலாளர்கள் ஆசைதம்பி வடக்கு ஒன்றிய செயலாளர் சிவ ராஜேஷ் கண்ணன் ஆகியோர் அதிமுகவில் இணைந்துள்ளனர்.