ஷேர் ஆட்டோ கவிழ்ந்து தொழிலாளி சாவு

Update: 2023-08-08 08:07 GMT

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சிறுவாடாவில் இருந்து மாதர்பாக்கம் நோக்கி நேற்று மதியம் பதிவெண் இல்லாத ஷேர்- ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் 4 பெண்கள் மற்றும் நேமலூரைச்சேர்ந்த கூலித்தொழிலாளி முருகேசன் (வயது 42) என்பவர் உள்பட மொத்தம் 5 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

அந்த ஆட்டோ என்.எஸ்.நகர் அருகே செல்லும் போது எதிர்பாராதவிதமாக கட்டுபாட்டை இழந்து அருகே இருந்த பனை மரத்தில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த முருகேசன் பலத்த காயம் அடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சுப்பம்மா (50) என்பவர் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இது குறித்து பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்