ஷேர் ஆட்டோ-லாரி மோதல்; 8 பேர் காயம்

ஷேர் ஆட்டோ-லாரி மோதிய விபத்தில் 8 பேர் காயம் அடைந்தனர்

Update: 2022-12-17 20:07 GMT

திருமங்கலம்,

மதுரை தோப்பூர் பகுதியில் இருந்து 10-க்கும் மேற்பட்டோர் திடியன் மேட்டுப்பட்டிக்கு சாமி கும்பிட மதுரை காளவாசல் பகுதியில் இருந்து ஷேர் ஆட்டோவில் சென்றனர். ஆட்டோவை ஜீவன் ராஜ் (வயது 25) ஓட்டிச் சென்றார். திடியன் மேட்டுப்பட்டி செல்லும் வழியில் செம்பட்டி பஸ் நிறுத்தத்தில் முன்னால் சென்ற லாரி திடீரென பிரேக் போட்டதால், ஷேர் ஆட்டோ எதிர்பாராதவிதமாக லாரியின் பின்புறம் மோதியது. இதில் தோப்பூரை சேர்ந்த ஜானகி(45), ஜெயக்கொடி (40), நீதி (50), மல்லிகா (33), தான்யாஸ்ரீ உள்பட 8 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து சிந்துபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்