சங்கராபுரம் ஒன்றியக்குழு கூட்டம்
சங்கராபுரம் ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.
சங்கராபுரம்,
சங்கராபுரம் ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் திலகவதி நாகராஜன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்லதுரை, செல்வகணேஷ், ஒன்றியக்குழு துணை தலைவர் அஞ்சலை கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அலுவலக பிரிவு உதவியாளர் பரமசிவம் வரவேற்றார்.
கூட்டத்தில் ஒன்றிய பொது நிதியில் இருந்து திட்டப்பணிகள் தேர்வு செய்வது குறித்தும், அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அய்யப்பன், அந்தோணியம்மாள், ஒன்றிய பொறியாளர்கள் ராஜகோபால், கோமதி, அரிகிருஷ்ணன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அம்பிகா, குமாரி, தனவேல், ஆரோக்கிய மார்சல்ரோச், பொன்னி, சுப்பிரமணி அபுபக்கர், சசிகுமார், கொளஞ்சி, விமலா, நிஷாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.