திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கூத்தாநல்லூர்
கூத்தாநல்லூர் அருகே உள்ள வேளுக்குடியில் ருத்ரகோடீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று சனி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் சிவபெருமான் மற்றும் நந்தி பகவானுக்கு 108 லிட்டர் பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருமக்கோட்டை
அதேபோல் திருமக்கோட்டை ஞானபுரீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தையொட்டி ஞானபுரீஸ்வரருக்கும், நந்திக்கும் பால், பன்னீர், சந்தனம், இளநீர், திரவியப்பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சாமிக்கும், நந்திகேஸ்வருக்கும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
நீடாமங்கலம்
நீடாமங்கலம் வட்டம் பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி சமேத சதுரங்கவல்லபநாதர், நந்திகேஸ்வரர் சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அதேபோல் நீடாமங்கலம் காசிவிசுவநாதர் கோவில், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில், பூவனூர் கல்யாணி அம்மன் சமேத கைலாசநாதர் கோவில், நீடாமங்கலம் கோகமுகேஸ்வரர் கோவில், நரிக்குடி எமனேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவாலயங்களிலும் சனி பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வலங்கைமான்
வலங்கைமான் மற்றும் வட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு நடந்தது. அதேபோல் வலங்கைமான் அருணாச்சலேஸ்வரர், கைலாசநாதர், வைத்தீஸ்வரர், காசிவிசுவநாதர், விருப்பாச்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர், ஆவூர் பசுபதீஸ்வரர், அரித்துவாரமங்கலம் பாதாளேஸ்வரர், நல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர், சந்திரசேகரபுரம் சந்திரமவுலீஸ்வரர் உள்ளிட்ட சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவாரூர்
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் நடந்த சனி பிரதோஷ வழிபாட்டில் நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
குடவாசல்
குடவாசல் அருகே உள்ள சீதக்கமங்கலம் மூலநாதர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு நடந்தது. அப்போது நந்திபகவானுக்கு பால், பன்னீர், தேன், திரவியம், பஞ்சாமிர்தம், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. திருப்பாம்புரம் ஷேசபுரீஸ்வரர் கோவில், குடவாசல் கோணேஸ்வரர் கோவில், சத்ரு சம்ஹார மூர்த்தி கோவில், திருவீழிமிழலை வீழிநாதசுவாமி கோவில், கூந்தலூர் ஜம்புகாரண்யேஸ்வரர் கோவில், சற்குணேஸ்வரபுரம் சற்குணேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவாலயங்களில் சனி பிரதோஷ வழிபாடு நடந்தது.
வடுவூர்
வடுவூர் வடபாதி கைலாசநாதர் கோவிலில் சனி பிரதோஷத்தையொட்டி மூலவர் கைலாசநாதர், வடிவழகி அம்மன், நந்தியம் பெருமாள் ஆகிய சாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டது. பரவாக்கோட்டை, பாமணி நாகநாதசாமி கோவில் உள்ளிட்ட சிவாலயங்களிலும் சனி பிரதோஷ வழிபாடு நடந்தது. வடுவூர் கோதண்டராமர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி நரசிம்மருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
தில்லைவிளாகம்
முத்துப்பேட்டையை அடுத்த ஜாம்புவானோடை வடகாடு விஸ்வநாதர் கோவிலில் நந்தி பகவானுக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. கோவிலூர் மருதீஸ்வரர் கோவில், இடும்பாவனம் சற்குணநாதர் கோவில், தில்லைவிளாகம் நடராஜர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.