சனி பிரதோஷ வழிபாடு

சிவன் கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது

Update: 2023-07-15 20:29 GMT

மேலூர், 

மேலூர் அருகே தும்பைப்பட்டி சிவாலயபுரத்தில் உள்ள பிரசித்திபெற்ற கோமதி அம்பிகை சமேத, சங்கர லிங்கம் சுவாமி, சங்கர நாராயணர் சுவாமி கோவிலில் ஆனி மாத சிவராத்திரி, தேய்பிறை சனி பிரதோஷ சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி சங்கரலிங்கம் சுவாமிக்கும், நந்தி பெருமானுக்கும் 16 வகையான அபிஷேகம் நடந்தது. பின்னர் சங்கரலிங்கம் சுவாமியும், நந்தி பெருமானும் சர்வ அலங்காரத்திலும், கோமதி அம்மன் சிறப்பு அலங்காரத்திலும் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். பிரதோஷ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, சங்கு நாதம் முழங்க, தீபாராதனைகளுடன் கோவில் வளாகத்தில் 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்கள். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அதேபோல் சோழவந்தான் பகுதியில் உள்ள சிவாலயங்களில் சனிபிரதோஷ விழா நடந்தது. திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவிலில் நந்தி பெருமானுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பிரளயநாத கோவிலிலும் நந்திபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. மன்னாடிமங்கலம் மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோவில், சோழவந்தான் பேட்டை அருணாசல ஈஸ்வரர் கோவில், திருவளவயநல்லூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், விக்கிரமங்கலம் கோவில்பட்டி மருததோய ஈஸ்வரமுடையார் கோவில், தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாதசுவாமி கோவில் மற்றும் பல்வேறு சிவன் கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு நடந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்