விழுப்புரம் பகுதியில் உள்ளசிவன் கோவில்களில் சனிப்பிரதோஷ பூஜைதிரளான பக்தர்கள் சாமி தரிசனம்

விழுப்புரம் பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் சனிப்பிரதோஷ பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனா்.

Update: 2023-07-01 18:45 GMT


விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள ஆதிவாலீஸ்வரர் கோவிலில் நேற்று சனிப்பிரதோஷ விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் மூலவருக்கும், நந்தி பெருமானுக்கும் பிரதோஷ கால பூஜை நடந்தது. அப்போது பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், குங்குமம், விபூதி உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மாலை 6.30 மணியளவில் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து ரிஷப வாகனத்தில் உற்சவர், கோவிலை சுற்றி வலம் வந்தார். இதில் விழுப்புரம் நகரத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல் விழுப்புரம் திரு.வி.க. வீதியில் உள்ள கைலாசநாதர் கோவில், கீழ்ப்பெரும்பாக்கம் பசுபதீஸ்வரர் கோவில், பனையபுரம் பனங்காட்டீஸ்வரன் கோவில் உள்ளிட்ட விழுப்புரம் பகுதியில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் நேற்று சனிப்பிரதோஷ பூஜை நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்