சக்தி விநாயகர் கோவில் சதுர்த்தி விழா ஊர்வலம்
கோவில்பட்டி சக்தி விநாயகர் கோவில் சதுர்த்தி விழா ஊர்வலம் நடைபெற்றது.
கோவில்பட்டி (கிழக்கு):
கோவில்பட்டி புதுக்கிராமம் சக்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி திருவிழா நடைபெற்றது. இல்லத்து பிள்ளைமார் சங்க தலைவர் சங்கரன் தலைமை தாங்கினார். விழா குழு தலைவர் காளிமுத்து முன்னிலை வகித்தார். தொடர்ந்து முளைப்பாரி ஊர்வலத்தை கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
விழாவினை முன்னிட்டு ெரயில் நிலைய சொர்ண விநாயகர் கோவிலில் இருந்து புதுக்கிராமம் சக்தி விநாயகர் கோவிலுக்கு பக்தர்கள் 1,008 பால்குடம் மற்றும் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி ஊர்வலமாக எடுத்து வந்தனர். இதில் சிறுவர் சிறுமியர்கள் கையில் தேசிய கொடி ஏந்தி பாரத மாதா வேடமணிந்தும், பல்வேறு கடவுள்களின் வேடமணிந்தும் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.