சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் 2 பேர் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை ெகாடுத்த 2 பேரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்
வருசநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் சுதாகரன் (வயது 19). 15 வயது சிறுவனும் இவரும் சேர்ந்து 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் வருசநாடு போலீசில் புகாா் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.