மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் கைது

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், அரசு பள்ளி ஆய்வக உதவியாளரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-12-24 22:32 GMT

இரும்பாலை:

பாலியல் தொல்லை

சேலம் இரும்பாலை அருகே உள்ள கீரபாப்பம்பாடியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆய்வக உதவியாளராக கருப்பூரை சேர்ந்த வீரவேல் (வயது 38) என்பவர் பணியாற்றி வருகிறார்.

இவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பள்ளியில் பெற்றோர், ஆசிரியர் கழக கூட்டம் நடைபெற்றது.

அப்போது அங்கு வந்திருந்த வீரவேலை திடீரென பெற்றோர்கள் தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் இரும்பாலை போலீசார் பெற்றோர்களிடம் இருந்து ஆய்வக உதவியாளர் வீரவேலை மீட்டனர்.

கைது

பின்னர் வீரவேலை சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வீரவேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்