மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் ஊழியருக்கு வலைவீச்சு
கும்மிடிப்பூண்டி அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் ஊழியரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருபவர் பாண்டியன் (வயது 29). தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். கடந்த 12-ந் தேதி, பாண்டியன் 15 வயது பள்ளி மாணவி ஒருவரை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று, பாலியல் தொல்லை அளித்துள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள தனியார் தொழிற்சாலை ஊழியர் பாண்டியனை வலைவீசி தேடி வருகின்றனர்.