பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொந்தரவு

மதுரையில் பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொந்தரவு ெகாடுத்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான்.

Update: 2022-06-14 18:42 GMT

மதுரை, 

மதுரையில் பிளஸ்-2 படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் மாணவியை, 17 வயது சிறுவன் காதலிப்பதாக கூறியுள்ளார். மேலும் அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார் என்பது தெரியவந்தது. அதை தொடர்ந்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 17 வயது சிறுவனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்