மனநலம் பாதித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை; 3 வாலிபர்களுக்கு தலா 20 ஆண்டு சிறை

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 3 பேருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு அதிரடி தீர்ப்பளித்தது.

Update: 2023-03-31 20:17 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர், 

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 3 பேருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு அதிரடி தீர்ப்பளித்தது.

பாலியல் தொல்லை

விருதுநகர் மாவட்டம் சிவகாசி திருத்தங்கல்லை சேர்ந்தவர்கள் அலெக்ஸ் பாண்டியன் (வயது 23), விக்னேஷ் (20), மணிகண்ட ராஜா (24). கூலி தொழிலாளிகளான இவர்கள் மனநலம் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதுகுறித்து சிவகாசி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.

20 ஆண்டு சிறை

இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள போக்சோ கோர்ட்டில் நடைபெற்றது. இந்த வழக்கை நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் விசாரித்து அலெக்ஸ் பாண்டியன், விக்னேஷ், மணிகண்ட ராஜா ஆகிய 3 பேருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் அதிரடி தீர்ப்பு கூறினார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க நீதிபதி பரிந்துரை செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்