சிறுமிக்கு பாலியல் தொல்லை;முதியவருக்கு ஆயுள் தண்டனை

ஓட்டப்பிடாரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

Update: 2023-07-28 18:45 GMT

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.

பாலியல் தொல்லை

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கே.பி.தளவாய்புரத்தை சேர்ந்தவர் உடையான் (வயது 63). இவர் கடந்த 2017-ம் ஆண்டு 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடையானை கைது செய்தனர்.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் கடந்த 31.3.2018 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், குற்றம் சாட்டப்பட்ட உடையானுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் முத்துலட்சுமி ஆஜரானார்.

Tags:    

மேலும் செய்திகள்