சிறுமிக்கு பாலியல் தொல்லை; வாலிபர் அதிரடி கைது

பாவூர்சத்திரம் அருகே, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

Update: 2023-03-30 18:45 GMT

பாவூர்சத்திரம்:

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியின் உறவினர் ஒருவர் திருப்பத்தூரில் உள்ளார். இவர் அங்குள்ள ஒரு தனியார் ஆலையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். அவருக்கும், திருப்பத்தூர் திருமால் நகரை சேர்ந்த ஜெயசீலன் என்பவருடைய மகன் விக்னேஷ் (வயது 24) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. சம்பவத்தன்று விக்னேஷ், பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்தவரின் செல்போனை எடுத்து பேசியுள்ளார்.

அப்போது அந்த சிறுமிக்கும், விக்னேசுக்கும் பழக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து அந்த சிறுமியிடம் விக்னேஷ் ஆசை வார்த்தை கூறி பேசி வந்துள்ளார். பின்னர் அந்த சிறுமியை வெளியூருக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி பாவூர்சத்திரம் போலீசில் கடந்த ஆண்டு புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விக்னேசை தேடி வந்தனர். நேற்று முன்தினம் விக்னேசை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். விக்னேஷ் மீது மோசடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்