சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவர் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது செய்யப்பட்டார்.
பண்ருட்டி,
மயிலாடுதுறை மாவட்டம், திருவிளையாட்டம் பகுதியை சேர்ந்தவர் மதி (வயது 57). இவர் கடலூர் மாவட்டம், வானமாதேவி பகுதியில் தங்கி ஆலைக்கு கரும்பு ஏற்றிச் செல்லும் டிராக்டர்களில் டிரைவர் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று வெள்ளப்பாக்கம் கிராமத்தில் தாயை இழந்து பாட்டி வீட்டில் வளர்ந்து வந்த 3 வயது சிறுமிக்கு மதி, பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த சிறுமியின் பாட்டி, இதுகுறித்து பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து மதியை போலீசார் கைது செய்தனர்.