சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவர் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முதியவர் கைது செய்யப்பட்டார்;

Update: 2022-10-27 22:20 GMT

நாங்குநேரி:

திருக்குறுங்குடி அருகே உள்ள மேலமாவடியைச் சேர்ந்தவர் அருணாசலம் (வயது 60). இவர் வயலுக்கு சென்று திரும்பிய ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார். அப்போது சிறுமி தன்னிடம் இருந்த மடக்கு கத்தியை பயன்படுத்தி தற்காப்புக்காக குத்திவிட்டு தப்பிய போது கத்தியை பிடுங்கியதில் சிறுமிக்கு காயம் ஏற்பட்டது.

தொடர்ந்து சிறுமியை அருணாசலம் துரத்தி வந்தார். வீட்டுக்கு வந்ததும் அந்த சிறுமி மிளகாய் பொடியை வீசி தப்பி விட்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் நாங்குநேரி அனைத்து மகளிர் போலீசார், அருணாசலம் மீது பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவருக்கு காயம் இருந்ததால் 2 நாள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை முடிந்ததும் சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்