சிறுமியிடம் பாலியல் சீண்டல்; முதியவருக்கு 20 ஆண்டு ஜெயில் - சென்னை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு

சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்ட முதியவருக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து சென்னை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Update: 2022-06-03 08:31 GMT

சென்னை சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் நாகமூர்த்தி (வயது 59). கடந்த 2018-ம் ஆண்டு இவர், அதே பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் கீழ்ப்பாக்கம் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகமூர்த்தியை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னை போக்சோ கோர்ட்டில் நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்னிலையில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, நாகமூர்த்தி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு தமிழக அரசு இழப்பீடாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்