பிளஸ்-2 மாணவியிடம் பாலியல் வன்கொடுமை; உறவினர் மீது வழக்கு
குடியாத்தத்தில் பிளஸ்-2 மாணவியிடம் பாலியில் வன்கொடுமையால் ஈடுபட்ட உறவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
குடியாத்தம் தரணம்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 தேர்வு எழுதியுள்ள மாணவிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து மாணவியின் பெற்றோர், அவரை டாக்டரிடம் அழைத்து சென்று பரிசோதனை செய்துள்ளனர். அப்போது மாணவி 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து பெற்றோர், மாணவியிடம் விசாரித்ததில் உறவினர் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜூஸ் கொடுத்ததாகவும், அதனை குடித்து மயங்கி விட்டதாகவும், அப்போது தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிவித்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் குடியாத்தம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா, மாணவியின் உறவினர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.