சாலையில் தேங்கி நிற்கும் பாதாள சாக்கடை கழிவுநீர்

மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் சாலையில் தேங்கிநிற்கும் பாதாள சாக்கடை கழிவுநீரினால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.

Update: 2023-04-26 18:45 GMT

மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் சாலையில் தேங்கிநிற்கும் பாதாள சாக்கடை கழிவுநீரினால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.

பாதாள சாக்கடை

மயிலாடுதுறை நகரில் பாதாள சாக்கடை திட்டம் கடந்த 2007-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்தில் அமைக்கப்பட்ட ஆள்நுழைவுத் தொட்டிகள் மற்றும் கழிவுநீர் குழாய்கள் ஆங்காங்கே உடைந்து சாலைகள் உள்வாங்குகின்றன.

பல தெருக்களில் பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கிக் கிடக்கின்றன. மயிலாடுதுறை நகரில் ஆள்நுழைவு தொட்டிகள் மட்டும் 16 இடங்களில் உடைந்து சேத மடைந்து சீரமைக்கப்பட்டு உள்ளன.

சாலையில் தேங்கிய கழிவு நீர்

இந்தநிலையில் நேற்று மயிலாடுதுறை கூறைநாடு திருமஞ்சன வீதியிலிருந்து எம்.ஜி.ஆர். நகர் செல்லும் சாலையில் பாதாள சாக்கடை ஆள்நுழைவுத் தொட்டியில் இருந்து கழிவு நீர் வெளியேறி தெருக்கள் முழுவதும் தேங்கி நிற்கின்றன.இதனால் அந்த சாலையில் நடந்து செல்லக்கூட முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதே போல அருகில் நாச்சிமுத்து நகரிலும் கழிவு நீர் சாக்கடை குளம்போல தேங்கி நிற்கின்றன. இந்த பகுதிகளில் எந்நேரமும் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே பாதாள சாக்கடையை உடனே சீரமைத்து சாலையில் தேங்கி உள்ள கழிவுநீரை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்