ஈரோடு நாடார்மேடு சாக்கடை கால்வாய் பாலம் கட்டும் பணியை விரைந்து தொடங்க வேண்டும்; பொதுமக்கள் கோரிக்கை

ஈரோடு நாடார்மேடு சாக்கடை கால்வாய் பாலம் கட்டும் பணியை விரைந்து தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2022-09-14 21:21 GMT

ஈரோடு

ஈரோடு நாடார்மேடு சாக்கடை கால்வாய் பாலம் கட்டும் பணியை விரைந்து தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கழிவுநீர் தேங்கியது

ஈரோடு நாடார்மேடு அண்ணமார் பெட்ரோல் பங்க் அருகில் சாஸ்திரிநகருக்கு செல்லும் சாலையில் சாக்கடை கால்வாய் செல்கிறது. இது மிகவும் குறுகலாக இருந்ததால் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறியது. மேலும் மழை பெய்த போது அந்த பகுதியில் குளம்போல் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். பொதுமக்கள் கழிவுநீரை மிதித்து நடந்து செல்லவேண்டிய அவலநிலை ஏற்பட்டது.

எனவே சாக்கடை கால்வாயை அகலப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

பணி தொடங்க வேண்டும்

இந்த நிலையில் கடந்த வாரம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பொக்லைன் எந்திரம் மூலமாக சாக்கடை கால்வாய் தூர்வாரப்பட்டது. இதையொட்டி அந்த வழியாக போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. அங்கு சாலையின் குறுக்கே தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன.

குழி தோண்டப்பட்டு ஒரு வாரம் ஆகியும் சாக்கடை கால்வாய் பாலம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை. இதனால் சாஸ்திரிநகருக்கு செல்லும் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள். மேலும் குழியில் யாரேனும் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே பணிகளை விரைந்து தொடங்கி முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்