சாலையில் ஓடும் சாக்கடை

சாலையில் ஓடும் சாக்கடை;

Update: 2023-08-17 20:23 GMT

மதுரை ஜீவா நகர் 1-வது தெருவில் உள்ள கல்பனா சாவ்லா தெரு மற்றும் அதன் அருகில் உள்ள பல்வேறு தெருக்களில் கழிவு நீர் வெளியேறி சாலை முழுவதும் தெப்பம் போல் தேங்கி நிற்கிறது. சாலையில் சாக்கடை கழிவு ஓடுவதால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் நோய் பரவும் அபாயம் உள்ளது. தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்