ஏரியில் கலக்கும் கழிவுநீர்
பிடாரி ஏரியில் கழிவுநீர் கலப்பதால் தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம், காவனூர் கிராம ஊராட்சிக்குட்பட்டது கா.அம்பாபூர் கிராமம். இங்குள்ள பிடாரி ஏரியிலுள்ள தண்ணீரை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். மேலும் ஆடு, மாடுகள் இந்த தண்ணீரை குடித்து வந்தது. மேலும் ஊரில் நடக்கும் சில விஷேச நாட்களில் இக்குளத்தில் இருக்கும் தண்ணீரை மக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது இந்த ஏரியில் கழிவுநீர் கலப்பதால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஏரியில் கழிவுநீர் கலக்காமல் நடவடிக்கை எடுப்பதுடன், ஏரியை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.