பள்ளிகொண்டா பேரூராட்சியில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணி

பள்ளிகொண்டா பேரூராட்சியில் கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரும் பணி நடந்தது.

Update: 2022-05-28 19:59 GMT

அணைக்கட்டு

பள்ளிகொண்டா பேரூராட்சியில் கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரும் பணி நடந்தது.

அணைக்கட்டு தாலுகா பள்ளிகொண்டா பேரூராட்சியில் கழிவுநீர் கால்வாய் சேறும் சகதியுமாக மாறியதால் சமீபத்தில் பெய்த மழையின்போது கழிவுநீர் தெருக்களில் ஓடியது. இந்த நிலையில் அந்தப்பகுதியில் ஆய்வு செய்த கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேரூராட்சியில் உள்ள அனைத்து கழிவுநீர் கால்வாய்களையும் உடனடியாக தூர்வார பேரூராட்சி செயல் அலுவலருக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில் செயல் அலுவலர் உமாராணி தலைமையில் 20-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் மற்றும் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளிகொண்டாவில் இருந்து குடியாத்தம் செல்லும் சாலையில் உள்ள கழிவு நீர் கால்வாய்யை தூர்வாரும் பணியில் நேற்று காலை ஈடுபட்டனர். தொடர்ந்து அனைத்து பகுதியில் உள்ள கால்வாய்களும் சுத்தம் செய்யப்படும் என செயல் அலுவலர் தெரிவித்தார்.

பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர், கவுன்சிலர்கள் பேரூராட்சி ஊழியர்கள் உடனிருந்தனர்.

---

Image1 File Name : 10787541.jpg

----

Reporter : K. DHIWAKAR Location : Vellore - VELLORE SUB-URBAN - ANAICUT

Tags:    

மேலும் செய்திகள்