ரூ. 25 லட்சம் செலவில் சாக்கடை அமைக்கும் பணி
ரூ. 25 லட்சம் செலவில் சாக்கடை அமைக்கும் பணி
வெள்ளகோவில்
வெள்ளகோவில் நகர் பகுதியில் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. வெள்ளகோவில் நகர் பகுதியில் மழைக்காலங்களில் மழை நீர் போதிய சாக்கடை வசதி இல்லாத இடங்களில் சாலையில் நீர் தேங்கி நிற்கின்றன. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். தற்போது நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வெள்ளகோவிலில் கோவை- திருச்சி ரோட்டில் பழைய பஸ் நிலையம் முதல் கே.பி.சி.நகர் வரை 15-வது மத்திய நிதி குழு மானிய திட்டம் 2020-2021 கீழ் ரூ.25 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.