குடிநீர் குழாயில் கழிவுநீர் வந்தது

கோவை 26-வது வார்டில் குடிநீர் குழாயில் கழிவுநீர் வந்தது

Update: 2023-03-30 18:45 GMT

கோவை மாநகராட்சி 26-வது வார்டு பீளமேடு முருகன் நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீருடன் சாக்கடைநீர் கலந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் தண்ணீரை பயன்ப டுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

இது பற்றி அவர்கள், வார்டு கவுன்சிலர் சித்ரா வெள்ளியங்கிரியிடம் புகார் தெரிவித்தனர். அவர், குடிநீருடன் கலந்து வந்த கழிவுநீரை பாட்டிலில் பிடித்து மாநகராட்சி ஆணையாளர், மேயர், மற்றும் அதிகாரிகளிடம் புகார் செய்தார்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து கவுன்சிலர் கூறும்போது, குடிநீருடன் சாக்கடை கழிவுநீர் கலந்து வருகிறது. அதில் தொட்டியிலும் கலந்ததால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

எனவே அவர்கள் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்து வைத்தனர். அதன்பிறகும் கழிவுநீர் கலந்து தான் குடிநீர் வருகிறது. இதை தடுக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

சூயஸ் திட்டத்துக்காக குழாய் பதிக்கும்போது, குடிநீர் குழாய் உடைந்து விடுகிறது. இதனால் குடிநீருடன் சாக்கடைநீர் கலக்கிறது.

எனவே இது போன்ற குறைபாடுகள் நேராமல் பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வினியோகம் செய்ய வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்