செட்டியாபத்து ஐந்துவீட்டு சுவாமி கோவில்புதிய அறங்காவலர்கள் பதவியேற்பு

செட்டியாபத்து ஐந்துவீட்டு சுவாமி கோவில் புதிய அறங்காவலர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-08-07 18:45 GMT

உடன்குடி:

செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி கோவில் புதிய அறங்காவலர்களாக ஆ.சுமந்திர பிரகாஷ், ஓ.மகேஸ்வரன், சி.சுந்தர்ராஜ், ம.ஜெகநாதன், பு.கஸ்தூரி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். பின்னர் நடைபெற்ற அறங்காவலர் குழு தலைவருக்கான தேர்தலை தூத்துக்குடி மாவட்ட அறநிலையத்துறை உதவி ஆணையரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சங்கர் நடத்தினார். கோவில் ஆய்வாளர் பகவதி, செயல் அலுவலர் மு.ஜெயந்தி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற தேர்தலில் ஓ.மகேஸ்வரன் புதிய அறங்காவலர் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். புதியஅறங்காவலர் குழு தலைவர் மற்றும் அறங்காவலர்கள் பதவியேற்றனர். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடிமாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, உடன்குடி யூனியன் தலைவர் டி.பி.பாலசிங், உடன்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலர் இளங்கோ, உடன்குடி பேரூராட்சி துணைத்தலைவர் மால்ராஜேஷ், பேரூராட்சி நியமனக்குழு தலைவர் ஜான்பாஸ்கர், செட்டியாபத்து ஊராட்சி மன்றத் தலைவர் பாலமுருகன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஜெசிபொன்ராணி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்