தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 79 வழக்குகளுக்கு தீர்வு
வால்பாறையில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 79 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
வால்பாறை
வால்பாறையில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 79 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
லோக் அதாலத்
வால்பாறையில் தேசிய லோக் அதாலத்(தேசிய மக்கள் நீதிமன்றம்) நடைபெற்றது. இதற்கு நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் தலைமை தாங்கினார். வக்கில் விஸ்வநாதன் லோக் அதாலத்துக்கு வந்தவர்களை வரவேற்றார். அரசு வக்கில் சிவஞானம், வக்கில்கள் முத்துசாமி, விஸ்வநாதன், முருகன், பால்பாண்டி, அன்பு நாகராஜன், சுமதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் 165 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தொடர்ந்து 79 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
தயங்க கூடாது
இதையடுத்து பேசிய நீதிபதி செந்தில்குமார் கூறும்போது, மக்கள் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாத நிலை இருப்பதால் வழக்குகளுக்கு வரும்போது இருதரப்பினரும் வந்தால் வழக்கை விரைவாக முடிக்க முடியும். மேலும் மக்கள் நீதிமன்றத்தை பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திக்கொள்ள தயங்க கூடாது என்று கேட்டுக்கொண்டார்.
தோட்ட நிறுவன வழக்குகள்
பின்னர் நடைபெற்ற விவாதத்தில் வாகன வழக்கு, காசோலை வழக்கு, குடிபோதையில் வாகனம் ஓட்டிய வழக்கு, லாட்டரி சீட்டு விற்ற வழக்கு, மதுபான வழக்கு, குடும்ப வழக்கு என மொத்தம் 79 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.19 லட்சத்து 75 ஆயிரத்து 950-க்கு சமரசம் செய்யப்பட்டது.
குறிப்பாக 10 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த தோட்ட நிறுவன வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. முடிவில் வக்கீல் பெருமாள் நன்றி கூறினார்.