சென்னை சிறு வழக்குகளுக்கான கோர்ட்டில் மக்கள் நீதிமன்றம் மூலம் 503 வழக்குகளுக்கு தீர்வு

சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள சிறுவழக்குகளுக்கான கோர்ட்டில் அந்த கோர்ட்டின் தலைமை நீதிபதி ஜெ.ஸ்ரீதேவி தலைமையில் மக்கள் நீதிமன்றம் நடந்தது.;

Update: 2023-12-16 00:23 GMT

சென்னை,

சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள சிறுவழக்குகளுக்கான கோர்ட்டில் அந்த கோர்ட்டின் தலைமை நீதிபதி ஜெ.ஸ்ரீதேவி தலைமையில் மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதில், ஏராளமான சிறு வழக்குகள் சமசர தீர்வை ஏற்படுத்தும் பொருட்டு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டன. விசாரணை முடிவில் மொத்தம் 503 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.

இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக ரூ.23 கோடியே 86 லட்சத்து 66 ஆயிரத்து 386 வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்