மக்கள் நீதிமன்றத்தில் 22 வழக்குகளில் தீர்வு

வேலூர் ஜெயிலில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 22 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு 9 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.;

Update: 2023-08-26 14:22 GMT

வேலூர் ஜெயிலில் நடந்த மக்கள்ீதிமன்றத்தில் 22 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு 9 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

வேலூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் மக்கள் நீதிமன்றம் (சிறை அதாலத்) நடந்தது. நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி முருகன் தலைமை தாங்கினார். நீதிபதிகள் ராதாகிருஷ்ணன், திருமால், பத்மகுமாரி, பூர்ணிமா, வேலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் 54 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. அவற்றில் 22 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, 9 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

நிகழ்ச்சியில் ஜெயில் சூப்பிரண்டு அப்துல்ரகுமான், ஜெயில் நலஅலுவலர் மோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்