ஈரோடு மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம் மூலம் 1,506 வழக்குகளுக்கு தீர்வு

ஈரோடு மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றம் மூலம் 1,506 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.20 கோடி நிவாரணம் வழங்கப்பட்டது.

Update: 2022-06-26 21:19 GMT

ஈரோடு மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றம் மூலம் 1,506 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.20 கோடி நிவாரணம் வழங்கப்பட்டது.

மக்கள் நீதிமன்றம்

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நாடு முழுவதும் மாதந்தோறும் லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டு வருகிறது. கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளை சமரசமாக முடித்து வைக்கும் வகையில் இந்த மக்கள் நீதிமன்றம் நடந்து வருகிறது. அதன்படி ஈரோடு மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் மக்கள் நீதிமன்றம் நேற்று ஈரோடு மாவட்டத்தில் நடந்தது.

ஈரோடு ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம், பெருந்துறை, கொடுமுடி, சத்தியமங்கலம், பவானி, கோபிசெட்டிபாளையம் ஆகிய கோர்ட்டுகளிலும் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. ஈரோடு மாவட்ட முதன்மை நீதிபதி முருகேசன் மக்கள் நீதிமன்ற விசாரணையை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர், 'கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளை மக்கள் நீதிமன்றம் மூலம் விரைந்து முடிக்கவேண்டும்' என்றார்.

ரூ.20 கோடி நிவாரணம்

இதில் கூடுதல் மாவட்ட நீதிபதிகள் மாலதி, ஹேமா, குற்றவியல் நீதித்துறை நடுவர் சரவணன் ஆகியோர் பல்வேறு வழக்குகளை விசாரித்தனர். மொத்தம் 6 ஆயிரத்து 189 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

முடிவில் 1,506 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.19 கோடியே 95 லட்சத்து 49 ஆயிரத்து 159 நிவாரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் சார்பு நீதிபதிகள், உரிமையியல் நீதிபதிகள், நீதித்துறை நடுவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்