14 வழக்குகளுக்கு தீர்வு

மக்கள் நீதிமன்றத்தில் 14 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.;

Update: 2023-10-15 18:45 GMT


தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவுப்படி, ஊட்டி கோர்ட்டில் தேசிய அளவிலான சிறப்பு மக்கள் நீதிமன்றம் நேற்று முன்தினம் நடந்தது. நீலகிரி மாவட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும், மாவட்ட நீதிபதியுமான அப்துல் காதர் தலைமை தாங்கினார். இதில் 14 வழக்குகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு, ரூ.68 லட்சத்து 75 ஆயிரத்து 960 இழப்பீடு மற்றும் தீர்வு தொகையாக வழக்காடிகளுக்கு பெற்று தரப்பட்டது. மாவட்டத்தில் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் லிங்கம் செய்திருந்தார்.


Tags:    

மேலும் செய்திகள்