மக்கள் நீதிமன்றத்தில் 110 வழக்குகளுக்கு தீர்வு

மக்கள் நீதிமன்றத்தில் 110 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

Update: 2023-08-12 18:57 GMT

புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் சார்பில் மக்கள் நீதிமன்றம் மாவட்ட முதன்மை நீதிபதி நாராயணன் வழிகாட்டுதல் படி நேற்று நடைபெற்றது. புதுக்கோட்டை கோர்ட்டில் கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி வசந்தி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான ராஜேந்திர கண்ணன், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி ஜெயகுமாரி ஜெமிரத்னா, முதன்மை சார்பு நீதிபதி சசிக்குமார், மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா ஆகிய நீதிபதிகள் கொண்ட 3 அமர்வுகள் மற்றும் தாலுகா நீதிமன்றங்களில் ஒரு அமர்வும் நடைபெற்றது. இதில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள், வாகன விபத்து இழப்பீடு வழக்குகள், உரிமையியல் வழக்குகள், காசோலை மோசடி மற்றும் வங்கி வராக்கடன் வழக்குகள் என மொத்தம் 110 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. மேலும் உரியவர்களுக்கு ரூ.1 கோடியே 29 லட்சத்து 26 ஆயிரத்து 233 வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்