சூரிமாரியம்மன் கோவிலில் செடில் உற்சவம்

நாகூர் சூரிமாரியம்மன் கோவிலில் செடில் உற்சவம் நடந்தது.

Update: 2022-06-06 12:04 GMT

நாகூர்:

நாகை அருகே நாகூர் மெயின் ரோட்டில் சூரிமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா கடந்த 27-ந்தேதி பூச்சொரிதல் நிகழச்சியுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகளின் வழியாக சென்று கோவிலை வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து இரவு செடில் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் தங்கள் குழந்தைகளை செடிலில் ஏற்றி நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

---

Tags:    

மேலும் செய்திகள்