மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு

செஞ்சி அருகே மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2022-10-17 18:45 GMT

செஞ்சி,

விழுப்புரம் அருகே உலகலாம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 45). இவர் தனக்கு சொந்தமான புதிய மோட்டார் சைக்கிளை நேற்று முன்தினம் இரவு வீட்டு முன்னால் நிறுத்திவிட்டு சென்றார். இந்த நிலையில் நள்ளிரவு இவரது மோட்டார் சைக்கிளை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து மர்மநபர்கள் எரித்ததாக தெரிகிறது.. இதில் மோட்டார் சைக்கிள் சேதடைந்தது. இது குறித்து கதிர்வேல் அளித்த புகாரின் பேரில் கஞ்சனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்