பெட்டிக்கடைக்கு தீ வைப்பு

விருதுநகரில் பெட்டிக்கடைக்கு தீ வைக்கப்பட்டது.

Update: 2023-08-15 18:54 GMT


விருதுநகர் பாண்டியன் நகரில் உள்ள அண்ணாநகரை சேர்ந்தவர்ஆரோக்கியம். இவரது தந்தை பரமசிவம். இவர் அதேபகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று நள்ளிரவு அந்த பெட்டி கடைக்கு யாரோ தீ வைத்து விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைப்பதற்குள் கடை முழுவதும் தீயில் எரிந்து நாசமானது. இதுகுறித்து ஆரோக்கியம் கொடுத்த புகாரின் பேரில் பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்